நான்கில் ஒன்று சொல்
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. தென்கிழக்கு ஆசியாவின் எந்த நாட்டுடன் வர்த்தகம், பாதுகாப்பு, அரிய வகை கனிம வளங்கள் உள்ளிட்ட துறைகளில், 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?அ. தாய்லாந்துஆ. மியான்மர்இ. வியட்நாம்ஈ. மலேசியா2. எந்தப் பாடலுக்கு நம் தேசிய கீதமான 'ஜன கண மன'விற்கு இணையான அந்தஸ்து வழங்கும்முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?அ. வந்தே மாதரம்ஆ. சாரே ஜஹான் சே அச்சாஇ. மா துஜே சலாம்ஈ. பாரத சமுதாயம் வாழ்கவே3. துருக்கியில் நடந்த ஜூனியர் உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில், அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக, 309 கிலோ எடைகளைத் தூக்கி, வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்?அ. ரஞ்சித்ஆ.மகேஷ்இ. யாஷ்ஈ. குகன்4. சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்பத்துடன் உருவான, 'கேலக்ஸ்-ஐ' எனும் விண்வெளி துறையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், உலகிலேயே முதல் ரேடார் மற்றும் கேமராவை இணைத்த, எத்தகைய தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது?அ. ஜி-சாட்ஆ. கார்டோசாட்இ. ஆப்டோசார்ஈ. கல்பனா - 15. ராணுவத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் எந்த நாடு, 6,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தி உள்ளது?அ. ரஷ்யாஆ. துருக்கிஇ. அமெரிக்காஈ. இந்தியாவிடைகள்: 1. இ, 2. அ, 3. இ, 4. இ, 5.ஆ.