உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி. கடந்த 2025-26 நிதியாண்டில், முந்தைய ஆண்டின் 710 சதவீதத்தில் இருந்து, எவ்வளவு சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது?அ. 7.75ஆ. 7.50இ. 7.70ஈ. 7.852. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள சுவாமிநாதன் ஜானகிராமனின் பதவிக் காலத்தை, மத்திய அரசு மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது?அ. ஓராண்டுஆ. இரண்டாண்டுஇ. மூன்றாண்டுஈ. ஐந்தாண்டு3. தமிழகத்தில், திருச்சி கிழக்கு உட்பட எத்தனை சட்டசபை தொகுதிகளில், விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது?அ. ஐந்துஆ. மூன்றுஇ. இரண்டுஈ. நான்கு4. 'இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எங்கள் நாட்டில் முதலீடு செய்தால், சலுகைகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும்' என, எந்த நாட்டின் தொழில்துறை அமைச்சர் சோக்குருக் குலமோவ் தெரிவித்துள்ளார்?அ. ஆப்கானிஸ்தான்ஆ. கஜகஸ்தான்இ. உஸ்பெகிஸ்தான்ஈ. வங்கதேசம்5. சண்டிகரில் நடந்த, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ், எத்தனை ரன் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது?அ. 250ஆ. 100இ. 200ஈ. 300விடைகள்: 1.இ, 2.ஆ, 3.அ, 4.இ, 5.ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !