உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இந்தியாவின் எந்த மாநிலத்தில், சூரிய சக்தி வாயிலாகப் பெறப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, 3,000 குடும்பத்தினர் கடந்த மாதம் பூஜ்ஜிய மின்சார கட்டணத்தைப் பெற்றுள்ளனர்?அ. குஜராத்ஆ. உத்தரப்பிரதேசம்இ. ஒடிசாஈ. பீகார்2. அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின், 'பி.எம். ஸ்ரீ' திட்டத்தின் நிதி பயன்பாட்டில், இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?அ. தமிழகம்ஆ. ஆந்திரம்இ. கேரளம்ஈ. சிக்கிம்3. அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, பாகிஸ்தான், கத்தார் நாடுகளில், எங்கள் நாட்டைப் போன்ற பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என, எந்த நாட்டின் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் கூறினார்?அ. உக்ரைன்ஆ. இஸ்ரேல்இ. ஈரான்ஈ. அமெரிக்கா4. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எத்தனை அதிநவீன போர்க் கப்பல்களை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்?அ. இரண்டுஆ. மூன்றுஇ. நான்குஈ. ஐந்து5. உலகக் கோப்பை கால்பந்து தொடர் 23வது சீசன் லீக் போட்டியில், கத்தார் அணியை வீழ்த்தியதன் மூலம், எந்த அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது?அ. கனடாஆ. ரஷ்யாஇ. ஆஸ்திரேலியாஈ. தென்ஆப்பிரிக்காவிடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. ஆ, 5. அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !