உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு

ஆறு முழு எண்கள் இறங்குவரிசையில் எழுதப்படுகின்றன.அதில், முதல் ஐந்து எண்களின் சராசரி மதிப்பு 30ஆக இருக்கிறது. அதேநேரத்தில், கடைசி ஐந்து எண்களுக்குச் சராசரி காணும்போது 25ஆக இருக்கிறது.முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் (Difference) என்ன?விடை: 25தீர்வு: ஆறு எண்களை a, b, c, d, e, f என்று கருதலாம். அவற்றை இறங்குவரிசையில் a>b>c>d>e>f என்று எழுதலாம்.இதில், முதல் ஐந்து எண்களின் சராசரி = 30அதாவது, (a+b+c+d+e)/5 = 30 (a+b+c+d+e) = 30×5 = 150...(i)கடைசி ஐந்து எண்களின் சராசரி = 25அதாவது, (b+c+d+e+f)/5 = 25 (b+c+d+e+f) = 25×5 = 125 ...(ii)சமன்பாடு (i)இலிருந்து (ii)ஐக் கழிப்போம்:a+b+c+d+e - (b+c+d+e+f)= 150-125⇒ a+b+c+d+e-b-c-d-e-f= 150-125⇒ a-f = 25.ஆக, முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 25.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !