நூற்றுக்கு நூறு: எவ்வளவு தொலைவு?
உங்களுக்கு ஒரு கனச்சதுரம் வழங்கப்படுகிறது. அதன் பக்கங்களின் அளவுகள் 5 செ.மீ. என்று இருக்கிறது.ஒரு பேனாவைப் பயன்படுத்தி, நீங்கள் கனச்சதுரத்தின் விளிம்புகளில் (Edges) ஒரு பாதையை அமைக்க வேண்டும், ஒரு முறை சென்ற விளிம்புப் பாதையில் மீண்டும் போகக் கூடாது. அதேநேரத்தில், பேனாவைப் பாதையிலிருந்து எடுக்காமல் வரைய வேண்டும்.எத்தனை விளிம்புகளைப் பயன்படுத்தினால், நீண்ட பாதை கிடைக்கும்? அதன் மொத்த தூரம் எவ்வளவு?விடைகள்: ஒன்பது விளிம்புகளைப் பயன்படுத்தினால், நீண்ட பாதை கிடைக்கும். அதன் மொத்த தூரம் 9×5 = 45 செ.மீ.