நூற்றுக்கு நூறு: மாத்தி யோசிங்க!
கீழ் அடுக்கில் இருக்கும் பெட்டிகளை, படத்தில் காட்டியபடி, மேலே உள்ள அடுக்கில் வைக்க வேண்டும். ஆனால், சில நிபந்தனைகள்: * ஒருமுறை எடுக்கும்போது ஒரே ஒரு பெட்டியை மட்டுமே எடுத்து, இடமாற்றம் செய்ய வேண்டும். அது ஒரு செயல்பாடு என்று கருதப்படும்.* மேலே பெட்டி இருக்கும்போது கீழுள்ள பெட்டியை எடுக்கக் கூடாது. * சிறிய பெட்டிக்கு மேலே பெரிய பெட்டியை வைக்கக் கூடாது.* பெட்டிகள் அருகருகே வைக்கக் கூடாது. ஒன்றன்மேல் ஒன்று தான் அடுக்க வேண்டும்.* கையில் எந்தப் பெட்டியையும் வைத்திருக்கக் கூடாது. பெட்டியை எடுத்தால், ஏதேனும் ஓர் அடுக்கில் அதை வைத்துவிட வேண்டும். குறைந்தபட்சம் 6 செயல்பாடுகளில் கீழே இருப்பதை மேலே உள்ள அடுக்கில் இடமாற்றம் செய்ய முடியுமா?விடை: 6 செயல்பாடுகளில் முடியாது. ஆனால், 7 செயல்பாடுகளில் சாத்தியம்.செயல்பாடு 1: A பெட்டியை அடுக்கு 3இல் வைக்கலாம்.செயல்பாடு 2: B பெட்டியை அடுக்கு 2இல் வைக்கலாம்.செயல்பாடு 3: A பெட்டியை அடுக்கு 2இல் வைக்கலாம். B பெட்டிக்கு மேல்!செயல்பாடு 4: C பெட்டியை காலியாக இருக்கும் அடுக்கு 3இல் வைக்கலாம்.செயல்பாடு 5: A பெட்டியை காலியாக இருக்கும் அடுக்கு 1இல் வைக்கலாம்.செயல்பாடு 6: B பெட்டியை அடுக்கு 3இல் வைக்கலாம். A பெட்டிக்கு மேலே!செயல்பாடு 7: A பெட்டியை அடுக்கு 3இல் வைக்கலாம். B பெட்டிக்கு மேல்.இடமாற்றம் செய்துவிட்டோம்!