நூற்றுக்கு நூறு: கேனில் பால்!
ஒரு கேனில் பால் நிரப்பப்படுகிறது.நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை 15 கிலோகிராம். பால் கேனில் பாதி அளவு பால் நிரப்பியபோது, அதன் எடை 9 கிலோகிராமாக இருந்தது.எனில், காலி கேனின் எடை என்ன?விடைகள்: 3 கிலோகிராம்விளக்கம்: பால் நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை = 15 கி.கி....(i)பாதி அளவு பால் நிரப்பப்பட்ட பால் கேனின் எடை= 9 கி.கி. ...(ii)(i)-(ii) = 15 கி.கி. - 9 கி.கி. = 6 கி.கி.இந்த 6 கி.கி. என்பது கேனில் உள்ள பாலின் பாதி அளவு அல்லவா!அப்படியென்றால், பாலின் முழு அளவு 12 கி.கி.காலி கேனின் எடை = பால் நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை - கேனில் உள்ள பாலின் முழு அளவு = 15 கி.கி. - 12 கி.கி.எனவே, காலி கேனின் எடை = 3 கி.கி.