நூற்றுக்கு நூறு: தந்திர கணக்கு!
கீழே சொன்னபடி செய்தால், கணக்கில் உள்ள ஒரு தந்திரத்தை நீங்கள் அறியலாம்!* 1 முதல் 9 வரையில் ஏதேனும் ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்.(உதாரணமாக, 2ஐ நினைத்துக் கொள்வோம்.)* அந்த எண்ணுடன் 10ஐக் கூட்டுங்கள்.(2+10 = 12)* நீங்கள் நினைத்த எண் என்ன?அதையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ளுங்கள்.(12+2 = 14)* 2ஆல் வகுக்கவும்.(14/2 = 7)* வகுத்துக் கிடைத்த எண்ணை,நினைத்த எண்ணில் கழிக்கவும்.(7-2=5)விடை 5 வருகிறது அல்லவா!1 முதல் 9 வரையில், நீங்கள் எந்த எண்ணை எடுத்து இப்படிச் செய்தாலும், விடை '5' தான் வரும்.சந்தேகம் இருந்தால் சரிபாருங்கள்!