உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: எந்தப் பெட்டி மேலே?

A, B, C, D, E, F மற்றும் G ஆகிய ஏழு பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. ஆனால், அவை எழுத்து வரிசையில் அமைக்கப்படவில்லை.படத்தில் உள்ளது போல் அடுக்கப்படுகின்றன:* Bக்குக் கீழே இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்கப்படுகின்றன.* Fக்கு மேலே ஒரே ஒரு பெட்டி மட்டுமே வைக்கப்படுகிறது.* F மற்றும் Dக்கு இடையில் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கிறது.* A பெட்டியானது Gக்கு மேலே அமைகிறது.* Eக்குக் கீழே ஏதோ ஓர் இடத்தில் C பெட்டி வைக்கப்படுகிறது.எனில், மேலே எந்தப் பெட்டி முதலில் இருக்கும்?விடை: Eவிளக்கம்:Bக்குக் கீழே இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்கப்படுவதால், B ஆனது மேலிருந்து 5வது பெட்டியாக இருக்கும்.Fக்கு மேலே ஒரே ஒரு பெட்டி மட்டுமே வைக்கப்படுவதால், ' ஆனது மேலிருந்து 2வது பெட்டியாக இடம்பெறும்.F மற்றும் Dக்கு இடையில் ஒரே ஒரு பெட்டி இருக்கிறது என்பதால், 1) ஆனது மேலிருந்து 4வது பெட்டியாகப் படத்தில் உள்ளபடி இருக்கும்.EFCDBAGA பெட்டியானது Gக்கு மேலே அமைகிறது.அப்படியென்றால், கீழே காலியாக இருக்கும் இரு பெட்டிகளே சாத்தியம்.அப்படியானால், முதல் பெட்டியில் மீதமிருக்கும் E அல்லது C மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.E பெட்டிக்குக் கீழே C பெட்டி இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதால், E பெட்டியே முதல் பெட்டியாக இருக்கும் என்று அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !