மனிதர்களுக்கு உதவப்போகும் பன்றிகள்
மனிதர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது, உடலுறுப்புகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்கு மாற்றாக விலங்குகளின் உறுப்புகளைப் பொருத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் தொடர்கின்றன. இதில், அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பன்றிகளின் உடலில் உள்ள 25 வைரஸ்களைக் கண்டுபிடித்து, நீக்கியுள்ளனர். புதியதாக க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பன்றிகளிடம், குறிப்பிட்ட வைரஸ் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இனி பன்றிகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்துவதால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.