பயஸ் ஜோடி சாம்பியன்
இத்தாலியில் நடந்த ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் பயஸ், ஜெர்மனியின் ஆன்ட்ரி ஜோடி, ஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த மார்டின், சிலி நாட்டின் ஹான்ஸ் ஜோடியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இந்த ஆண்டில் பயஸ் ஏ.டி.பி. சாலஞ்சர் தொடரில் இரண்டாவது முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றினார்.