உள்ளூர் செய்திகள்

கழிவறைக்கு பூஜை!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள மாவ்தஹா கிராமத்தில், திறக்காத கழிவறைக் கட்டடத்திற்கு காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டது. அதைக் கடந்து சென்ற மக்கள், கோயிலாக நினைத்து வாசலில் நின்று வணங்கினர். சிலர், பூட்டியிருந்த கேட்டின் முன் பூஜையிட்டும் சென்றனர். நிறக்குழப்பத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம், கட்டடத்திற்கு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற பெயின்ட் அடித்தது. பின்னர் கழிவறை திறந்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !