முன்னேற்றம்!
ஐ.நா. அமைப்பு (UNDP) வெளியிட்ட மனிதவள மேம்பாட்டு குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129வது இடம் பிடித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 189 நாடுகள் கொண்ட இப்பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டை விட இம்முறை ஓரிடம் முன்னேறி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரின் ஜன்தன் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்கள் காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 27.1 கோடி மக்கள் வறுமை நிலையிலிருந்து மேம்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறியிருப்பது முக்கியமான அம்சமாகும்.