மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆகஸ்ட் 31 அன்று, சட்ட சபையில் அறிவித்தார். இதன் மூலம், மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைக்கவும், வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.