உள்ளூர் செய்திகள்

சட்டம் போற்று: சரியா? தவறா?

1. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.(சரி / தவறு)2. 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற சட்டம் 1989ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.(சரி / தவறு)3. சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) தபால் மூலம் வாக்களிக்க அனுமதி உண்டு.(சரி / தவறு)4. தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் 'நிர்வாசன் சதன்' (Nirvachan Sadan) என்று அழைக்கப்படுகிறது.(சரி / தவறு)5. இந்தியத் தேர்தல் ஆணையத் தலைவர், உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.(சரி / தவறு)விடைகள்:1. தவறு. மாநிலங்களுக்குள் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை மட்டுமே மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்.2. சரி.3 தவறு. தற்போதுள்ள விதிகளின்படி, என்.ஆர்.ஐ. வாக்காளர்கள் நேரில் வந்து மட்டுமே வாக்களிக்க முடியும்.4. சரி.5. சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !