உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

ஓசோன் என்பது ஆக்சிஜனின் ஒரு வடிவம்.உண்மை. ஓசோன் மூன்று ஆக்சிஜன் (O3) அணுக்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு. ஓசோனைக் கண்டறிந்தவர் சி.எப். ஸ்கோன்பின் (C.F. Schönbein). இது பூமிக்கு மேலே 'ஸ்ட்ரோடோஸ்பியர்' என்னும் அடுக்கில் 10 - 50 கி.மீ. தொலைவிற்கு அமைந்துள்ளது. 'ஸ்பெக்ட்ரோபோட்டோ மீட்டர்' என்னும் கருவியைக் கொண்டு, பூமியில் இருந்து ஓசோனை அளக்க முடியும். இதன் முக்கிய பணி, சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து, பூமியில் உள்ள உயிர்களைப் பாதுகாப்பது. 'ஸ்ட்ரோடோஸ்பியரில்' உள்ள இதன் அளவு 1 சதவீதம் குறைந்தாலும், பூமியை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் அளவு அதிகரித்து பூமியிலுள்ள உயிரிகளின் மரபணுக்களை நேரிடையாகப் பாதிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !