உள்ளூர் செய்திகள்

ரீலா? ரியலா?

பேபேசி ஒரு மிகப்பெரியத் தாவரக் குடும்பம் ஆகும்.உண்மை. பேபேசி (Fabaceae) என்பது பூக்கும் தாவரங்களிலுள்ள, மூன்றாவது பெரிய குடும்பம் ஆகும். இந்தக் குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் குடும்பத்தில் 732 பேரினங்களும், அவற்றினுள் 19,400 சிற்றினங்களும் உள்ளன. உலகெங்கும் இந்தத் தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இந்தக் குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை 'அவரைக் குடும்பம்' அல்லது 'பருப்பினக் குடும்பம்' எனலாம்.கொக்கிப்புழுக்கள் (Hook worms) மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.தவறு. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தீங்குசெய்யும் பலவிதப் புழுக்கள் மண்ணிலும் நீரிலும் நிறைந்துள்ளன. இவற்றுள் மனித உடலில் மட்டும் 50 வகையான புழுக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றில் பெரும் தீங்கு விளைவிப்பது கொக்கிப் புழுக்களும் அவற்றைச் சார்ந்த இனப் புழுக்களுமே ஆகும். இந்தப் புழு தன் வாயிலுள்ள கொக்கி வடிவிலான பற்களால் எளிதாகக் குடலின் உட்சுவரைக் கடித்துக் கொண்டிருப்பதால் இவை கொக்கிப்புழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !