சானியா ஜோடி சாம்பியன்
ஜப்பானின் டோக்கியோவில் பான் பசிபிக் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பொரா ஸ்டைரிகோவா ஜோடி, சீனாவின் சென் லியாங், ஜாவோஜுவான் யங் ஜோடியை எதிர்கொண்டது. துடிப்பாக செயல்பட்ட சானியா, பார்பொரா ஜோடி 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இது, இந்த ஜோடியின் இரண்டாவது பட்டமாக அமைந்தது.