உள்ளூர் செய்திகள்

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.1. தாஜ்மஹாலுக்குள் பார்வையாளர்கள் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்யும்படி அதிகாரிகள் உத்தரப் பிரதேச அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன?அ) கோபுரத்தை சுத்தம்செய்யஆ) புதையல் தேடஇ) கொரோனா பயம்ஈ) அப்படி எதுவுமில்லை2. வரும் நிதியாண்டில், எதன் காரணமாக வாகன விற்பனை என்பது மோட்டார் வாகனத்துறைக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என ஹோண்டா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத் துணைத் தலைவர் யாவீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்?அ) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்ஆ) சைக்கிளின் பெருக்கம்இ) பிஎஸ்-6 தர வாகனங்களின் அறிமுகம்ஈ) பெட்ரோல் விலையுயர்வு3. பணியிடை நீக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊழல் விசாரணைக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எது வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.?அ) ரேஷன் கார்டுஆ) ஆதார் அட்டைஇ) வாக்களிக்கும் உரிமைஈ) பாஸ்போர்ட்4. _______________தனியார் வங்கி திவால் நிலைக்கு வந்ததையடுத்து, அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது?அ) யெஸ் வங்கி (YES BANK)ஆ) ஆர்.பி.எல். வங்கி (RBL BANK)இ) எஸ்.பி.ஐ. வங்கி (SBI BANK) ஈ) கோட்டக் மகிந்திரா வங்கி (KOTAK MAHINDRA BANK) 5. இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அ) ரத்தன் சோரி சிங்ஆ) பீமல் ஜுல்காஇ) வித்தேஷ் ஷர்மாஈ) பாபு பட்டேல்6. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, வெளிமாநிலத்தவர் நுழைவதற்கான அனுமதியை எந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது?அ) உத்தரப் பிரதேசம்ஆ) மணிப்பூர்இ) சிக்கிம்ஈ) கோவா7. பாகிஸ்தானில் என்ன காரணத்தினால், தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது?அ) வெங்காய விலையுயர்வுஆ) பயிர்கள் மீதான வெட்டுக்கிளி தாக்குதல்இ) கொரோனா பரவல்ஈ) பறவைக் காய்ச்சல்8. எகிப்தில், 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய எந்த மன்னரின் பிரமிடு, 14 ஆண்டுக்கால மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டது?அ) மன்னர் ஜோசர்ஆ) டுட்டான்கமுன்இ) அங்க் அமான்ஈ) ரமேசஸ்9. கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது? அ) ரூ. 5 லட்சம் கோடிஆ) ரூ.10 லட்சம் கோடிஇ) ரூ.20 லட்சம் கோடிஈ) ரூ.25 லட்சம் கோடி 10. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள, 'நாசா' அனுப்பவிருக்கும் ரோவருக்கு, 13 வயதுச் சிறுவன் பரிந்துரைத்த, எந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது?அ) விடாமுயற்சி (Perseverance)ஆ) வலிமை (Fortitude)இ) உறுதிப்பாடு (Tenacity)ஈ) புத்தி கூர்மை (Ingenuity)விடைகள்1)இ 2)இ 3)ஈ 4)அ 5)ஆ 6)இ 7)ஆ 8)அ 9)ஈ 10)அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !