உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்!

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. தமிழகத்தின் எந்த இரு மாவட்டங்களில், புதிய நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் அமைக்கும் பணிகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடங்கியுள்ளது?அ. ஈரோடு, திருச்சிஆ. திருச்சி, சேலம்இ. மதுரை, இராமநாதபுரம்ஈ. சேலம், ஈரோடு2. இந்திய மாநிலமான ஜார்க்கண்டின், புதிய கவர்னராக சமீபத்தில் பதவி ஏற்றுள்ளவர்?அ. சி.பி. இராதாகிருஷ்ணன்ஆ. தமிழிசை சொந்தர்ராஜன்இ. வானதி சீனிவாசன்ஈ. இல.கணேசன்3. இந்தியாவில், குறிப்பிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள எத்தனை இடங்களை, பொதுமக்கள் வசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது?அ. 18ஆ. 15இ. 10ஈ. 204. தமிழக நகர்ப்புறப் பகுதிகளில், எத்தனை சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டடங்களுக்கு, பணிநிறைவுச் சான்று இன்றி, மின் இணைப்பு வழங்கலாம் என்று, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது?அ. 5,060ஆ. 10,050இ. 7,070ஈ. 8,0705. ஐக்கிய நாடுகள் சபையான 'யுனெஸ்கோ'வின், 2023ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாய்மொழி விருதுக்கு, மொழியியலாளரும், நாட்டுப்புறக் கலைஞருமான மகேந்திரகுமார் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?அ. ஹரியாணாஆ. அசாம்இ. ஒடிஷாஈ. தெலங்கானா6. கேரள மாநிலம், தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், எத்தனை வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்?அ. 231ஆ. 250இ. 151ஈ. 2427. வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து, மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்கு அடிப்படை மின் கடத்திப் பொருளான, இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் ஆலையை, ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் எங்கு அமைக்க உள்ளன?அ. கர்நாடகம்ஆ. குஜராத்இ. சத்தீஸ்கர்ஈ. இராஜஸ்தான்8. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த, 43வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணி?அ. ஆந்திரம்ஆ. மேற்கு வங்கம்இ. தமிழகம்ஈ. மஹாராஷ்டிரம்நான்கில் ஒன்று சொல் விடை1. ஆ2. அ3. இ4. ஈ5. இ6. அ7. ஆ8. இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !