நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1 பெண்களின் விகிதம், இந்தியா சுதந்திரம் பெற்றபோது (9%) இருந்ததைவிட, எத்தனை சதவீதம் தற்போது உயர்ந்துள்ளதாக, தேசிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது?அ. 50ஆ. 65 இ.68ஈ. 702 முதன்முதலாக, 'பி.எம்.மித்ரா' எனும், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா, எந்தப் பகுதியில் அமைய உள்ளது?அ. மும்பைஆ.விருதுநகர்இ. சென்னைஈ.பெங்களூரு3. இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில், மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், 'டிஜிட்டல்' முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும், 'இன்ஸ்டென்ட் மனி பேமென்ட் சிஸ்டம்' (ஐ.எம்.பி.எஸ்.) எனும் வசதி தொடங்கப்பட்டுள்ளது?அ. தமிழ்நாடுஆ. குஜராத்இ. ஆந்திர பிரதேசம்ஈ. ஹரியாணா4. இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில், முதன்முறையாக மின்சார இரயில்களை இயக்கி, இந்திய இரயில்வே சாதனை படைத்துள்ளது?அ. மிசோரம்ஆ. பீஹார்இ. மேகாலயாஈ. ஜார்க்கண்ட்5. இந்தியாவில் உள்ள, சால்ட் லேக் என்ற பகுதியில், ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக, உலக வர்த்தக மையம் அமைய உள்ளது. இது எந்த மாநிலத்தில் உள்ளது?அ. தெலங்கானாஆ. மஹாராஷ்டிரம்இ.பஞ்சாப்ஈ மேற்குவங்கம்6 கிழக்கு ஆப்பிரிக்க நாடான இங்கு, கடும் வறட்சி காரணமாக கடந்தாண்டு மட்டும், 43,000 பேர் பலியாகி உள்ளது, உலக சுகாதார மையம் கூட்டாக அந்த நாடு எது ? நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது?அ. சோமாலியாஆ. எத்யோபியா இ. கென்யாஈ. உகாண்டா7. ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ள ஐரோப்பிய நாடு?அ. போலந்துஆ. ரோமானியாஇ. பின்லாந்துஈ. பெல்ஜியம்விடை: 1.இ,2.ஆ,3.அ, 4. இ, 5. ஈ, 6. அ, 7.இ