நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் நோக்கில், அந்தமான் -நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை என்னவாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது?அ. ஸ்ரீ மல்லிகாபுரம்ஆ. ஸ்ரீ நித்யாபுரம்இ. ஸ்ரீ விஜயபுரம்ஈ. ஸ்ரீ துளசிபுரம்2. தமிழகத்தில் வரும் 2025 -- 2026ஆம் நிதியாண்டில், சொத்து வரியை எத்தனை சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை, தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது?அ. 7 சதவீதம்ஆ. 6 சதவீதம்இ. 8 சதவீதம்ஈ. 10 சதவீதம்3. '21ஆம் நூற்றாண்டின் வரலாறு எழுதப்பட்டால், அதில் இந்தியாவின் எந்த உற்பத்தியின் புரட்சி, பொன் எழுத்துகளில் இடம்பெறும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்?அ. சூரிய மின்ஆ. எத்தனால்இ. மின்சாரம்ஈ. மருந்துகள்4. டில்லி முதல்வர் பதவியில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் விலகியதை அடுத்து, புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ள, அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் யார்?அ. ராஜேந்திர பால்ஆ. கோபால் ராய்இ. ஸ்மிருதி இரானிஈ. அதிஷி5. ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில், எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது?அ. 10ஆ. 15இ. 8ஈ. 186. காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாக்களுக்குப் பிரபலமான எந்த அமெரிக்க நிறுவனம், அதன் தேவை குறைந்ததால், சமீபத்தில் திவால் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது?அ. மில்டன்ஆ. டப்பர்வேர் இ. கிச்சன்வேர்ஈ. சிக்னோராவேர்7. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சிறு வயதிலேயே சேரும் வகையில், புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் என்ன?அ. சிரஞ்சீவி யோஜனாஆ. நெய் ரோஷினிஇ. உஜ்வாலாஈ. என்.பி.எஸ்.வாத்சல்யா8. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், 48 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, எந்த நாடு வென்றது?அ. பூட்டான்ஆ. இந்தியா இ. நேபால்ஈ. இலங்கைவிடைகள்: 1 இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. அ, 6. ஆ, 7. ஈ, 8. ஆ.