நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஜே.வி.பி. எனப்படும், ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியைச் சேர்ந்தவர்?அ. ரணில் விக்கிரமசிங்கேஆ. அனுரா குமார திசநாயகேஇ. சஜித் பிரேமதாசாஈ. அரவிந்த் குமார்2. 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, வெள்ளியால் செய்யப்பட்ட எந்தச் சிற்பத்தைப் பரிசாக வழங்கினார்?அ. திருவள்ளுவர்ஆ. தாஜ்மஹால்இ. காந்திஈ. ரயில்3. தமிழகத்தில், தொழில் துறையில் பெண்கள் பங்கேற்பு எவ்வளவு சதவீதமாக உள்ளது. இது, தேசிய சராசரியான, 24.28 சதவீதத்தை விட அதிகமாகும்?அ. 50ஆ. 42இ. 35ஈ. 254. தமிழகத்தில், எந்த இரு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட, 'மினி டைடல்' பூங்கா, சமீபத்தில் திறக்கப்பட்டது?அ. தஞ்சாவூர், சேலம்ஆ. சென்னை, திருச்சிஇ. கோவை, ஈரோடுஈ. காஞ்சிபுரம், செங்கல்பட்டு5. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் வகையில், எத்தனை வாரக் காலத்திற்கு, 'ஏ.ஐ. டேட்டா சயின்ஸ்' என்ற புதிய படிப்பை இணைய வழியில் நடத்த, சென்னை ஐ.ஐ.டி. முடிவு செய்துள்ளது?அ. 5 வாரம்ஆ. 8 வாரம்இ. 10 வாரம்ஈ. 12 வாரம்6. சுசிலா, மேத்தா ஆகிய இருவருக்கு, 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முறையே எந்தெந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?அ. மருத்துவம், திரைப்பட இயக்குநர்ஆ. நடிகை, வழக்கறிஞர்இ.பாடகி, கவிஞர்ஈ. நாட்டியக் கலைஞர், இசையமைப்பாளர்7. தேசிய அளவில் உணவகத் தொழிலில், மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்கள் முறையே இரண்டு, மூன்று, நான்காவது இடங்களில் உள்ள நிலையில், முதலிடத்தில் எந்த நகரம் உள்ளது?அ. டில்லிஆ. கோல்கட்டாஇ. அஹமதாபாத்ஈ. மதுரை8. ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45வது சீசனில், தனி நபர் பிரிவுகளில், தங்கம் வென்ற திவ்யா, வந்திகா உட்பட, மேலும் இரு இந்திய வீரர்கள் யார்?அ. பிரக்யானந்தா, வைஷாலிஆ. விதித், ஹரிகிருஷ்ணாஇ. குகேஷ், அர்ஜுன்ஈ. ஹரிகா, தானியாவிடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. அ, 8. இ.