நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், தரமற்ற எத்தனை மருந்துகள் மற்றும் நான்கு போலி மருந்துகள் கண்றியப்பட்டு, அதன் விவரம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது?அ. 80ஆ. 71இ, 60ஈ. 552. சென்னை உயர் நீதிமன்றத்தில், எவ்வளவு லட்சத்திற்கு அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக, தலைமை நீதிபதி ஸ்ரீராம் தெரிவித்தார்?அ. 5 லட்சம் ஆ. 2.5 லட்சம்இ. 4.5 லட்சம்ஈ. 3 லட்சம்3. இந்தியாவில், பெரிய ராணுவ விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணி, எந்த மாநிலத்தில் உள்ள, வதோரா என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில், சமீபத்தில் தொடங்கி உள்ளது?அ. அசாம்ஆ. மேற்குவங்கம்இ. குஜராத்ஈ. ஆந்திரப் பிரசேம்4. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், எத்தனை ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்?அ. 36,647ஆ. 25,367இ. 30,057ஈ. 40,0685. கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை தாக்கம் இனி, மாநிலப் பேரிடராகக் கருதப்பட்டு, அதில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு, எவ்வளவு பணம் நிவாரணமாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது?அ. ரூ. 5 லட்சம் ஆ. ரூ. 4 லட்சம்இ. ரூ. 2 லட்சம்ஈ. ரூ. 1 லட்சம்6. 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் இனி, எத்தனை வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது?அ. 80ஆ. 75இ. 70ஈ. 657. ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பின் பங்கு, எவ்வளவு சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன?அ. 60ஆ. 50இ. 40ஈ. 208. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான விளம்பரத் தூதராக, தேர்தல் கமிஷன் நியமித்துள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யார்?அ. சச்சின் டெண்டுல்கர்ஆ. மகேந்திரசிங் தோனிஇ. சௌரவ் கங்குலிஈ. ராகுல் டிராவிட்விடைகள்: 1.ஆ, 2. ஈ, 3. இ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. அ, 8. ஆ