நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், மொத்தமுள்ள 225 இடங்களில், எத்தனை இடங்களைக் கைப்பற்றி, அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது?அ. 200ஆ. 159 இ. 100ஈ. 1352. வெளிநாட்டுச் சொத்துகள், வருவாய் குறித்த தகவல்களை, வருமான வரி கணக்குத் தாக்கலில் தெரிவிக்காவிட்டால், எவ்வளவு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது?அ. ரூ.5 லட்சம்ஆ. ரூ.6 லட்சம்இ. ரூ.2 லட்சம்ஈ. ரூ.10 லட்சம்3. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சமீபத்தில் எத்தனை தமிழ் அறிஞர்களின் நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன?அ. பத்துஆ. ஒன்பது இ. எட்டுஈ. ஏழு4. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், 'பால்கன் 9' என்ற ராக்கெட் உதவியுடன், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன ஏவுதளத்தில் இருந்து, வெற்றிகரமாக ஏவப்பட்டது. செயற்கைக்கோளின் பெயர் என்ன?அ. ஜிசாட் 30ஆ. ஜிசாட் 7ஏஇ. ஐஆர்எஸ் 1ஏஈ. ஜிசாட் என்25. சூரியசக்தி மின்சாரத்தைச் சேமித்து பயன்படுத்தும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை ஏற்படுத்த, சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது?அ. தமிழகம் ஆ. புதுச்சேரிஇ. கேரளம்ஈ. ஆந்திரம்6. ரேஷன் எனப்படும், பொது வினியோக முறையில், 'டிஜிட்டல்' மயமாக்கும் நடவடிக்கைகளால், எத்தனை போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது?அ. 8.60 கோடிஆ. 2.50 கோடிஇ. 50 லட்சம்ஈ. 5.80 கோடி7. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகள் செய்ததற்காக, எந்த இரு கரீபிய நாடுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தங்கள் நாட்டின் உயரிய விருதுகளைஅளித்துக் கெளரவித்து உள்ளன?அ. அருபா, பஹாமாஸ்ஆ. கயானா, டொமினிகாஇ. பர்படாஸ், பெலிஸ்ஈ. ஜமைக்கா, செயின்ட் லூசியா8. டேவிஸ் கோப்பை போட்டியுடன், டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல ஸ்பெயின் வீரர்?அ. நோவக் ஜோகோவிச்ஆ. ஜானிக் சின்னர்இ. ரஃபெல் நடால்ஈ. கார்லஸ் அல்காரஸ்விடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. ஆ, 4. ஈ, 5. அ, 6. ஈ, 7. இ, 8. ஆ.