தமிழகத்திலிருந்து தேர்வு
ஜன. 28 - கோவை: அகில இந்திய அளவில் அனைத்து மாநில 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க என்.ஜி.பி., கல்லூரியை சேர்ந்த, நான்கு வீரர்கள் தேர்வு பெற்றனர்.மத்திய பிரதேசம் ஜான்சியில் அகில இந்திய அளவில், 21 வயது ஜூனியர் ஹாக்கி போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க தமிழக அணி சார்பில், 18 வீரர்கள் தேர்வு சென்னையில் நடந்தது. இதில் கோவை என்.ஜி.பி., கல்லூரியை சேர்ந்த ராஜ்குமார், முனவர்பாஷா, மணிகண்டன், சுஜூமோன் ஆகியோருடன்; சென்னை, அரியலுாரிலில் இருந்து தலா 3 பேரும்; மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஊர்களிலிருந்து தலா 2 பேரும்; வேலூர், தஞ்சாவூரிலிருந்து தலா ஒருவரும் தேர்வு பெற்றனர். இந்தத் தகவலை, கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.