உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஏப்ரல் 17, 1989: உலக ஹீமோபீலியா நாள்எக்ஸ் குரோமோசோம் என்கிற மரபணு பாதிக்கப்படும்போது ஹீமோபீலியா நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டு காயம் ஏற்பட்டால், இரத்தம் உறையாமல் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஏப்ரல் 18, 1983: உலக பாரம்பரியச் சின்னங்கள் நாள்நினைவுச் சின்னங்களைக் கொண்டாட சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக முடிவு எடுக்கப்பட்டது. பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.ஏப்ரல் 20, 1889: அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாள்ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவர். 1934ல், ஜெர்மனி நாட்டின் தலைவர். தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை தன்னைச் சுற்றியே சுழல வைத்த சர்வாதிகாரி. அதிபராவதற்கு முன், போர்க்கைதியாக சிறையில் இருந்தபோது 'மெயின் காம்ஃப்' என்ற சுயசரிதை எழுதினார். ஏப்ரல் 21, 1925: வாண்டுமாமா பிறந்த நாள்சிறுவர் இலக்கிய எழுத்தாளர். 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், அறிவியல் நூல்கள், சித்திரக்கதைகள் உள்ளிட்டவற்றைப் படைத்துள்ளார். ஏப்ரல் 22, 1870: விளாடிமிர் லெனின் பிறந்த நாள்உலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ரஷ்யப் புரட்சியாளர்; சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபர்; லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவனர். 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்' என்ற நூலை எழுதி இருக்கிறார்.ஏப்ரல் 23, 2010: ஆங்கிலமொழி நாள்ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்று. வரலாறு, கலாசாரம், சாதனைகளை அறிந்துகொள்ளவும், மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !