தேதி சொல்லும் சேதி
நவம்பர் 7, 1858 : விபின் சந்திர பால் பிறந்த நாள்புரட்சிக் கருத்துகளின் தந்தை. சுதேசி இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களைச் செயல்படுத்திய தலைவர். 'வந்தே மாதரம்' என்கிற பத்திரிகையை நடத்தினார். அந்நிய பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வி முறை போன்றவை இவரது மேடை முழக்கங்கள்.நவம்பர் 7, 1888: சர் சி.வி.ராமன் பிறந்த நாள்இந்திய அறிவியல் மேதை. கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தார். 'ராமன் விளைவு' என அறிவியல் உலகம் போற்றும் இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930ல் நோபல் பரிசு பெற்றார். 1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.நவம்பர் 7, 1867: மேரி கியூரி பிறந்த நாள்கதிர்வீச்சால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அறிந்தும் ஆராய்ச்சியை நிறுத்தாமல், புற்றுநோய் சிகிச்சைக்கான ரேடியத்தை கண்டறிந்து சாதனை படைத்தார். இயற்பியல், வேதியியல் துறைகளில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்று இருக்கிறார்.நவம்பர் 8, 1680: வீரமாமுனிவர் பிறந்த நாள்இத்தாலி நாட்டிலிருந்து தமிழகம் வந்து, தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ப்பற்றால் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். 9 மொழிகளில் புலமை பெற்றிருந்தார். தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். நவம்பர் 10, 1994: அமைதி மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாள்வன்முறைக்காக அல்லாமல் அமைதி, முன்னேற்றத்துக்காக அறிவியல் பயன்பட வேண்டும். 'அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டுக்கே' என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா. சபை இந்த நாளைக் கொண்டாடி இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்குகிறது.நவம்பர் 11, 1898: கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்தமிழ்மொழியின் உயர்வுக்காகப் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது.