உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஏப்ரல் 30, 1777 - கார்ல் ஃப்ரெடரிக் காஸ் பிறந்த நாள்கணித வல்லுநர். பகா எண்களை ஆராய்ந்து சமன்பாடுகளைக் கண்டறிந்தார். எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நூல்களை எழுதியுள்ளார்.மே 1, 1890 - உலகத் தொழிலாளர் நாள்19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்தனர். இதை எதிர்த்து 8 மணி நேரமாக வேலைநேரத்தைக் கொண்டு வர தொழிற்சங்க மாநாடு இந்த நாளை அறிவித்தது.மே 3, 1973 - உலகப் பத்திரிகை சுதந்திர நாள்பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்று. பத்திரிகையையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, ஐ.நா. சபை இந்த நாளை அங்கீகரித்தது. மே 4, 1767 - தியாகராஜ சுவாமிகள் பிறந்த நாள்கர்நாடக சங்கீத மேதை. ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார். கீர்த்தனைகள் இயற்றி, இசையமைத்துப் பாடினார். 'தியாகப் பிரம்மம்' என்று போற்றப்படுகிறார்.மே 5, 1818 - கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்அரசியல் பொருளாதார வல்லுனர், எழுத்தாளர், புரட்சியாளர். இவரது பொதுவுடைமைக் கொள்கைகளும் கருத்துகளும் மக்களிடம் எழுச்சியைத் தூண்டின. இவர் எழுதிய 'மூலதனம்' என்ற நூல், உலகப் பிரசித்தி பெற்றது.மே 6, 1861 - மோதிலால் நேரு பிறந்த நாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை. வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !