உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

செப்டம்பர் 4, 1825 - தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள்சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 1885இல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவ உதவினார். வல்லரசாக அல்ல; வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டார். செப்டம்பர் 5, 1888 - சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர். ஆசிரியராகப் பணியாற்றிய இவரது பிறந்த நாள், 'ஆசிரியர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5, 1872 - வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். 'கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்பட்டார். செப்டம்பர் 8, 1965 - உலக எழுத்தறிவு நாள்அனைவருக்கும் எழுத்தறிவுக் கோட்பாட்டை யுனெஸ்கோ உருவாக்கியது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.செப்டம்பர் 9, 1828 - லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள்ரஷ்ய நாவலாசிரியர். ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்தார். 'போரும் அமைதியும்' என்ற இவரது நாவல், உலகப் புகழ் பெற்றுத் தந்தது. இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் வந்துள்ளன.செப்டம்பர் 9, 1899 - கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள்தமிழ் சரித்திரக் கதைகளின் முன்னோடி. 'கல்கி' என்ற புனைப்பெயரில் எழுதினார். 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற காலத்தால் அழியாத பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !