உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி

ஜனவரி 28, 1865: லாலா லஜபதி ராய் பிறந்த நாள்'பஞ்சாப் சிங்கம்' என்று மக்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர். எழுத்தாளர், அரசியல் தலைவர் என, பன்முக ஆளுமை கொண்டவர். காந்திஜி வருகைக்கு முன், இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். ஜனவரி 29, 1970: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்த நாள்இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர். 2004இல் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004ஆம் ஆண்டுக்கான ஒரே பதக்கமும் இதுதான்.ஜனவரி 30, 1948: இந்தியத் தியாகிகள் நாள்தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தவும் ஆண்டுதோறும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.பிப்ரவரி 1, 1895: ஓ.பி.ராமசாமி பிறந்த நாள்திண்டிவனம், ஓமந்தூர் கிராமத்தில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர். சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரும் இவரே! ஆட்சிக் காலத்தில் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கையும் அமல்படுத்தினார். பிப்ரவரி 2, 1971: உலக ஈரநில நாள்ஈரநிலங்கள் உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மையைக் கொண்டிருப்பதால், 'பச்சை நுரையீரல்கள்' என அழைக்கப்படுகின்றன. பல்லுயிர் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.பிப்ரவரி 3, 1963 :ரகுராம் ராஜன் பிறந்த நாள்புகழ்பெற்ற இந்தியப் பொருளியல் வல்லுநர். இந்திய ரிசர்வ் வங்கியின் 23வது ஆளுநர். 2017ஆம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு பட்டியலில் ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்றது. சமீபத்தில் இவர் எழுதிய புத்தகம் 'ஐ டூ, வாட் ஐ டூ' (I Do What I Do).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !