உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி!

16 செப்டம்பர், 1922 - கி.ராஜநாராயணன் பிறந்த நாள்தமிழ் எழுத்தாளர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியையும் உருவாக்கினார். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக, 1991இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.17 செப்டம்பர், 1879 - ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள்சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை, மூடநம்பிக்கைகள், ஜாதி வேற்றுமைகள் அகற்றப் போராடிய பகுத்தறிவாளர். இவரது சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு வாதமும் புகழ்பெற்றது. 'தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்' என்று இவர் போற்றப்பட்டார். 18 செப்டம்பர், 2003 - உலக தண்ணீர் கண்காணிப்பு நாள்நீர்நிலைகளைப் பரிசோதித்து, தரம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.19 செப்டம்பர், 1965 - சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை. நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் என்கிற பெருமை உடையவர்!21 செப்டம்பர், 1987 - உலக அமைதி நாள்உலகில் அமைதியை வலியுறுத்தவும் நாடுகளிடையே போர் ஏற்படுவதைத் தடுக்கவும் ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து பல நாடுகள் இதை அனுசரிக்கின்றன.22 செப்டம்பர், 1791 - மைக்கேல் பாரடே பிறந்த நாள்மின்சாரத்தின் தந்தை. கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார். வாயுக்களை முதன்முதலில் திரவமாக மாற்றியவரும் இவரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !