உள்ளூர் செய்திகள்

இந்தியாவுக்கு வெள்ளி

லண்டனில், சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 0 - 0 என சமநிலை வகித்தது. இதை அடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஹர்மன்பிரீத் சிங் மட்டும் ஆறுதல் அளிக்க, இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் முதல்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது. கடைசியாக, கடந்த 1982ல் நெதர்லாந்தில் நடந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !