உள்ளூர் செய்திகள்

திறன் உலா: பொருத்துங்கள்

நாம் வலைத்தளப் பக்கங்களை அணுகும் போது, அந்தப் பக்கங்கள் சரியாக 'லோட்' ஆகாமல் (Loading) சில பிழைகளைக் காட்டும். ஒவ்வொரு பிழையும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டிருக்கும். இவை HTTP பிழைக் குறியீடுகள் (Error Codes) என அழைக்கப்படுகின்றன. இந்தப் பிழைகள் 4xx (கிளையன்ட் பிழைகள்) மற்றும் 5xx (சேவையக பிழைகள்) எனப் பிரிக்கப்படுகின்றன. கீழே சில பிழைக் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பிழைக் குறியீடுகளைச் சரியான காரணங்களுடன் பொருத்துங்கள்.1. 403 Error - அ. ஒரு சேவையகம் மற்றொரு சேவையகத்திடமிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பதில் பெறாமல் போவது (Gateway Timeout).2. 404 Error - ஆ. பயனர் குறுகிய நேரத்தில் அதிகமான கோரிக்கைகளை அனுப்பியதால் தடுக்கப்பட்டது (Too Many Requests).3. 429 Error - இ. பயனர் தொடர்பு கொள்ள நினைக்கும் சேவையகம் தற்காலிகமாகக் கிடைக்காமல் போவது (Service Unavailable)4. 503 Error - ஈ. பயனருக்கு அந்த ஆதாரத்தை அணுக அனுமதி இல்லை (Forbidden).5. 504 Error - உ. பயனர் கேட்ட வலைத்தளப் பக்கம் அல்லது ஆதாரம் சேவையகத்தில் இல்லை (Page Not Found).விடைகள்: 1. ஈ 2. உ3. ஆ4. இ5. அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !