திறன் உலா: பொருத்துங்கள்
தரவுத்தளத்தை நிர்வகிக்கவும், தரவுகளைக் கையாளவும் பயன்படும் மொழிதான் SQL (Structured Query Language). இந்த மொழியில் உள்ள கட்டளைகள் அடிப்படையில் தான் தரவுகள் கையாளப்படுகின்றன. கீழே சில கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பயன்பாடுகளுடன் பொருத்துங்கள்.1. DROP: அ. பயனர்களுக்குத் தரவுத்தளத்தில் அணுகல் உரிமைகளை வழங்கும்.2. UPDATE: ஆ. தரவு அட்டவணையை முழுமையாக நீக்கும்.3. SELECT: இ. ஏற்கெனவே உள்ள தரவுகளை மாற்றி புதுப்பிக்கும்.4. GRANT: ஈ. பரிவர்த்தனையை உறுதிப்படுத்தி, மாற்றங்களை நிரந்தரமாகச் சேமிக்கும்.5. COMMIT: உ. அட்டவணையில் இருந்து குறிப்பிட்ட தரவுகளை மீட்டெடுக்கும்.விடைகள்: 1. ஆ 2. இ 3. உ 4. அ 5. ஈ