உள்ளூர் செய்திகள்

திறன் உலா: சுருக்கச் சொல் என்ன?

இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்புகளில் ஒன்று. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் பயணச் சீட்டு வாங்குதல், முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அன்றாட பயன்பாடுகளில் சில சுருக்கச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழே சில பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கச்சொல் என்ன என்பதைச் சொல்லுங்கள்.1. பயணிகளின் விவரங்களும், பயணத் தகவல்களும் அடங்கிய பதிவு எண்ணிற்குப் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல்?__________________2. உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை கிடைக்காத நிலையில், ஓர் இருக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் வசதி?__________________3. முன்பதிவு இல்லாத சாதாரணப் பயணச் சீட்டுகளை வழங்கும் அமைப்பு?__________________4. அவசரப் பயணங்களுக்காக ஒரு நாளைக்கு முன்னதாக வழங்கப்படும் டிக்கெட் ஒதுக்கீடு முறை?__________________5. பயணச் சீட்டு முன்பதிவில் மிக அதிகமான முன்னுரிமை கொண்ட காத்திருப்போர் பட்டியலுக்குப் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல்?__________________6. ரயில் பெட்டிகளில் உள்ள கீழ், நடு, மேல் படுக்கை வசதிகளைச் சுருக்கமாக எப்படிக் குறிப்பிடுவார்கள்?__________________விடைகள்: 1. PNR - Passenger Name Record2. RAC - Reservation Against Cancellation3. UTS - Unreserved Ticketing System 4. TQ - Tatkal Quota5. GNWL - General Waiting List6. LB / MB / UB - Lower / Middle/Upper Berth


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !