உள்ளூர் செய்திகள்

திறன் உலா: முதல் பெயர் என்ன?

இன்று நாம் இணையத்தில் வீடியோ பார்க்க யூடியூப், படங்களைப் பகிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எடிட் செய்ய போட்டோஷாப் எனப் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்தச் செயலிகள் அனைத்தும் தொடக்கத்தில் இதே பெயரில்தான் அறிமுகமாயினவா என்று கேட்டால், இல்லை. காப்புரிமைப் பிரச்னைகள், நிறுவனத்தின் நோக்கம் மாறுதல் உள்ளிட்ட பல காரணங்களால் இவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன. இங்கு சில பிரபலமான செயலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முதலில் உருவாக்கப்பட்டபோது அல்லது அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் முதல் பெயர் என்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.1. யூடியூப் (YouTube)2. ஃபயர்பாக்ஸ் பிரவுசர் (Firefox)3. அமேசான் (Amazon)4. இன்ஸ்டாகிராம் (Instagram)5. அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)6. விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player)விடைகள்:1. டியூன் இன் ஹூக் அப் (Tune In Hook Up]2. பீனிக்ஸ் [Phoenix]3. கடப்ரா [Cadabra]4. பர்ப்ன் (Burbn]5. டிஸ்ப்ளே (Display] மற்றும் இமேஜ் - ப்ரோ [ImagePro)6. வீடியோலான் கிளையன்ட் [VideoLAN Client]


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !