திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலம்
'நாட்டில், 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற முதல் மாநிலம்' என்ற பெருமை பெற்ற கேரளா, விரைவில் மற்றொரு பெருமையையும் பெற இருக்கிறது. வரும் நவம்பர் மாதத்தில், 'திறந்தவெளி கழிப்பிடமில்லா முதல் மாநிலம்' என்ற சிறப்பைப் பெற உள்ளது. இதற்காக கேரள அரசு, 'சுசித்வா மிஷன்' எனப்படும் தூய்மை இயக்கத்தின் மூலமாக, மாநிலத்தின் 941 கிராம பஞ்சாயத்துகளில், 1.90 லட்சம் கழிப்பிடங்களைக் கட்ட உள்ளது.