உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தம்

இந்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 2016ஆம் ஆண்டு நவம்பரில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. பின்னர், புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிட்டு வெளியிட்டது.அதில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பண நோட்டுகளும் அடக்கம். அதிக மதிப்பு கொண்ட இந்த ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி, கருப்புப் பணம் சேர்க்கும் வாய்ப்புள்ளதாக அப்போதே புகார் எழுந்தது. தற்போது வருமான வரித்துறையினரும் ரெய்டுகளில் அதிகம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் சிக்குவதாகக் கூறியுள்ளனர். மேற்கண்ட செய்தியை, ரிசர்வ் வங்கியின் அறிக்கையும் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி அதிரடியாக நிறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !