திறமையே பெருமை!
'இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து' என்பது பழமொழி. வாழ்க்கை முழுக்க பல விஷயங்களை நாம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். எனினும், கற்பதற்கு ஏற்ற பருவம் மாணவப் பருவம்தான். கற்றுக்கொள்வது என்பது பாடம் மட்டும் இல்லை. பாடம் தவிர்த்த பிற திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். பிற திறன்களைக் (Extra Curricular Activities) கற்றுக்கொள்வதால் என்ன பயன் என்ற தலைப்பில், திருவள்ளூர், ஏ.பி.எஸ். பள்ளிக் குழும மாணவர்கள் கலந்துரையாடினர். பிற திறன்களின் அவசியம், அவற்றின் பயன் குறித்த அவர்களது கருத்துகளை அறிந்துகொள்வோம்.இரா.சஞ்சய் 8ஆம் வகுப்புபிற திறன்களைக் கத்துக்கறதால தன்னம்பிக்கை வளருது. எனக்கு யோகா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசில இருந்து யோகா கத்துக்கறேன். யோகா போட்டிகளில பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கேன். யோகா உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. அதனால ஆர்வத்தோட எனக்கான சிறப்புத் தகுதியா அந்தக் கலையை வளர்த்துக்கறேன்.சு.தமிழரசன் 11ஆம் வகுப்புஎனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும். என்னோட ஹாபியா இருக்கறதுதான் நான் கத்துக்கற பிற திறனாவும் இருக்கு. கிரிக்கெட், ஃபுட் பால் விளையாடுவேன். நிறைய போட்டிகளில கலந்துக்குவேன். விளையாடும்போதும் விளையாடி முடிச்சதும் உற்சாகமா இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.ர.அபிஷேக் 12ஆம் வகுப்புஸ்கூல்ல பாடத்தைக் கத்துக்கறதோட, பிற திறன்களையும் கத்துக்கறது அவசியம். எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். நடனம் ஆடப் பிடிக்கும். இந்த ரெண்டு விஷயத்தையும் நான் தொடர்ந்து பயிற்சி செய்யறேன். நடனம், ஓவியம் ரெண்டுமே கான்சென்ட்ரேஷனை அதிகரிக்குது.ஸ்ரீ.பா.சௌம்யா 12ஆம் வகுப்புஇசை, எனக்கு மிகப் பெரிய 'ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்'. நான் அதைத்தான் எனக்கான பிற திறனாக வளர்த்துக்கறேன். அறிவு வளர்ச்சிக்குத் தேவையானதை நாம கிளாஸ்ல கத்துக்கலாம். நமக்கு இருக்கற ஓய்வுநேரத்துல நமக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கலாம். இது நமக்குள்ள நம்பிக்கையை ஏற்படுத்தும். சாதிக்கத் தூண்டும்.கா.மோ.வந்தனா 12ஆம் வகுப்புபிற திறன்களைக் கத்துக்கறதால உடல், மனச் சோர்வு அடையாம இருக்கலாம். எனக்கு நாடகங்கள் நடிக்கப் பிடிக்கும். மேடையில நிறைய பேர் முன்னாடி பேசி நடிக்கறப்ப எல்லோரும் பாராட்டுவாங்க. அது நம்மை உற்சாகப்படுத்தும். யோகாவும் எனக்குப் பிடிச்ச விஷயம். அதையும் நான் கத்துக்கறேன்.நீ.ஆமி ஆராதனா 9ஆம் வகுப்புகைவினைப் பொருட்கள் செய்யறது எனக்குப் பிடிக்கும். விதவிதமான அழகுப் பொருட்களைச் செய்வேன். வீட்டில் உள்ள வீணான பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் செய்வேன். அதை நண்பர்களுக்குப் பரிசாகவும் கொடுப்பேன். செஸ் விளையாடறதிலேயும் ஆர்வம் உண்டு. பிற திறன்களை வளர்த்துக்கறது மாணவர்களுக்கு நிறைய உற்சாகம் தரும் விஷயம்.