உள்ளூர் செய்திகள்

தங்கம் வென்ற தமிழக வீரர்!

ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பளு தூக்குதல் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது. இந்தியா சார்பில், 77 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம், தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சதீஷ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர். காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முன்னதாக, மகளிர் பளு தூக்கும் போட்டியில், சஞ்சிதா சானு(53 கிலோ பிரிவு), மீராபாய் சானு (48 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !