உள்ளூர் செய்திகள்

தமிழ்ச் சாரல்: காற்றுக்கென்ன பேரு

பூமிக்கு உயிர் கொடுப்பது காற்றே. நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கும் இந்தக் காற்று, நான்கு திசைகளில் இருந்தும் வெவ்வேறு பெயர்களுடனும், குணங்களுடனும் வீசுகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசையில் இருந்து வரும் காற்றுக்கு, ஒரு தனி அடையாளம் உண்டு. தமிழில் தனிப் பெயர்களும் உண்டு. குறிப்புகளை வைத்துப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.1. நான் மேற்குத் திசையில் (குடக்கு) இருந்து வருகிறேன். வறண்ட பகுதியில் இருந்து வருவதால் நான் வீசும்போது வெப்பமாக இருக்கும். அதிக வலிமையுள்ள காற்று நான். என் பெயர் என்ன?2. நான் மழைக்காலக் காற்று. குளிர்ச்சியாக இருப்பேன், மழை வருவதை அறிவிப்பேன். கிழக்குத் திசையில் (குணக்கு) இருந்து, கடல் பகுதிக்கு மேலிருந்து வருவேன். நான் யார்?3. நான் வடக்கில் இருந்து வருவேன். பனிப் பகுதியில் இருந்து வருவதால், குளிர்ச்சியாக இருப்பேன். ஊதைக் காற்று என்றும் என்னை அழைப்பார்கள். நான் எந்தக் காற்று?4. நான் மென்மையான காற்று. தெற்குத் திசையில் இருந்து வீசுவேன். மரம், செடி, கொடி, பூக்களைத் தழுவி வருவதால், வேகம் குறைந்து வீசுவேன். எனக்கான பெயர் என்ன?விடைகள்:1. கோடைக்காற்று2. கொண்டல்3. வாடைக்காற்று4. தென்றல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !