கணக்கும் இனிக்கும்
இரகசியத்தைக் கண்டுபிடித்த மீனா!* ஓவியா, மீனா, காவியா ஆகிய மூன்று சிறுமிகளும் எண் புதிர் விளையாடிக் கொண்டிருந்தனர்.* ஓவியா, 1 முதல் 20 வரையிலான எண்களில் ஓர் எண்ணைத் தேர்ந்தெடுத்தாள். “அந்த எண் 3 அல்ல. ஆனால், 3இன் மடங்குகளில் ஒன்று,” என்று தன் தோழிகளுக்கு 'க்ளூ' கொடுத்தாள்.* “க்ளூ போதுமானதாக இல்லை. அந்த எண் 4ஆல் வகுபடுமா?” என்று மீனா கேட்டாள்.* ஓவியா, “வகுபடாது,” என்றாள்.* காவியா, “அந்த எண் 5ஆல் வகுபடுமா?”* ஓவியா, “வகுபடாது. ஆனால், அது ஓர் ஒற்றைப்படை எண்,” என்றதும், மீனா சட்டென்று சரியான விடையைக் கூறினாள்.எனில், மீனா கூறிய விடை என்ன?விடை: 9