சரித்திர சங்கமம்: வெற்றிடமான வெற்றியின் நகரம்
உத்தரப் பிரதேசத்தில் உத்தாள் -உள்ள ஆக்ரா நகரிலிருந்து 376 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பதேபூர் சிக்ரி (fatehpur Sikri) நகரம். மொகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டது.பதேபூர் சிக்ரி என்றால் வெற்றியின் நகரம் என்று பொருள். அக்பருக்கு நீண்ட நாட்களாக ஆண் குழந்தை இல்லை. இல்லை. இதனால் அவர், சிக்ரியில் வசித்து வந்த சூஃபி ஞானி ஒருவரைச் சந்தித்தார். அதன் பிறகு அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சலீம் (வரலாற்றில் ஜஹாங்கீர் என்று அழைக்கப்பட்டவர்) எனப் பெயரிட்டார். பின்னர் அக்பர் அந்த இடத்தைத் தனது தலைநகராக (பொ.யு. 1571) மாற்ற முடிவு செய்தார்.நகரத்தில் அக்பர் தனது அரசவை, அரண்மனை, மசூதி ஜோதா பாய் அரண்மனை உள்ளிட்ட முக்கியமான கட்டடங்களைக் கட்டினார். பதேபூர் சிக்ரி, மொகலாயர்களின் முதல் திட்டமிடப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது. சிவப்பு மணற்கற்களால் மொகலாய, பாரசீக, இந்தியக் கட்டடக் கலை பாணியின் கலவையாக இந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. ஜோதா பாய் அரண்மனை, பஞ்ச் மஹால் உள்ளிட்ட கட்டடங்கள் இங்கு உள்ளன. குஜராத் வெற்றியை நினைவுகூர கட்டப்பட்ட புலந்த் पंज्ञा (Buland Darwaza) எனப்படும் பிரமாண்டமான நுழைவாயிலும் இங்குள்ளது.பதேபூர் சிக்ரி, அக்பரின் தலைநகராக 14 ஆண்டுகள் மட்டுமே இருந்தது. போதிய அளவு தண்ணீர் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ, தலைநகரை 1585ஆம் ஆண்டில் வேறு ஒரு நகருக்கு மாற்றினார். அந்த நகரம் எது?விடைகள்: லாகூர்