ஏப்ரல் 12க்குள் தேர்வுகள் நிறைவு!
பள்ளிகள் ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம், புதுச்சேரியில் ஏப்.18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, வாக்குச் சாவடிகளைத் தயார் செய்ய குறைந்தது நான்கு நாட்களாவது அவகாசம் தேவை. அதனால், பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்.1ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதிக்குள் முடித்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10வது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 29ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.