உலகத்தை அறிய உதவும் ஊடகங்கள்
'மாணவர்கள் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் சென்னை, விருகம்பாக்கம், பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியனுடன் கலந்துரையாடினார்கள்.விழியன்அன்றாட வாழ்க்கையில தகவல்களை நமக்குச் சொல்வது ஊடகங்கள்தான். பலவிதமான செய்திகளையும், நிகழ்வுகளையும் ஊடகங்கள் வழங்குது. மாணவப் பருவத்தில ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்குது. சமூகம், உலகம் பற்றிய புரிதலையும் தெளிவையும் வழங்குது. இன்றைய நவீன காலத்துல அச்சில் மட்டுமில்லாம, தொலைக்காட்சி, இணையம்னு வகை வகையான ஊடகங்கள் நமக்குக் கிடைச்சிருக்கு. இவற்றை நாம் முறையாவும், ஆக்கப்பூர்வமாவும் பயன்படுத்திக்கணும். நீங்க ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தறீங்கன்னு சொல்லுங்க.கி.பால்ராஜ், 9ஆம் வகுப்புநான் இணையம் மூலமாத்தான் செய்திகளைத் தெரிஞ்சுக்கறேன். வாரத்துல நாலு முதல் ஐந்து மணி நேரம் வரை இணையம் பயன்படுத்தறேன். கல்வி சார்ந்த தகவல்கள் ஊடகங்கள் மூலமாக கிடைக்குது. செய்தித்தாள்களை எப்பவாவதுதான் வாசிக்கறேன். மாணவர் இதழ்கள் தொடர்ந்து வாசிக்கறேன்.வே.வசந்தராஜன், 10ஆம் வகுப்புஇப்ப எல்லா செய்தித்தாள்களும் இணையத்துல கிடைக்குது. முக்கியமான செய்திகளைப் படிப்பேன். அரசோட திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற தகவல்களை இணையத்துல படிப்பேன்.வெ.சங்கர் பாலாஜி, 8ஆம் வகுப்புநான் தொலைக்காட்சி பாக்கறதில்ல. ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களைத் தான் வாசிப்பேன். இணையத்துல பாடம் சம்பந்தமான செயல்முறை விளக்கங்களை மட்டும் பார்ப்பேன். ர.ராககீர்த்தனா, 9ஆம் வகுப்புஎனக்கு புராஜக்ட் ஒர்க் செய்யறதுக்கு இணையம் உதவுது. விளையாட்டு சம்பந்தமான செய்திகளை சேகரிச்சு வெச்சுப்பேன். செய்திகளை 'டிவி'யில பாக்கறதோட சரி. சோஷியல் நெட்ஒர்க் மூலமா பல செய்தி, தகவல்களைத் தெரிஞ்சுக்கறேன்.ம.சுவேத வர்சா, 8ஆம் வகுப்புதினமும் செய்தித்தாள் வாசிப்பேன். முக்கியமான விஷயங்களை அது மூலமா தெரிஞ்சுக்கறேன். பாடத்துல இருக்கற சந்தேகங்களை இணையத்துல தேடிப் படிப்பேன். ஊடகங்கள் படிப்புக்கு பயனுள்ளதா இருக்கு.ச.காயத்ரி, 8ஆம் வகுப்புசெய்தித்தாள் தொடர்ந்து படிக்கறதில்ல. இணையத்துல நான் கல்வி சம்பந்தமான வீடியோக்கள் பார்ப்பேன். அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கு. வீடியோவா பார்க்கும்போது நல்லா மனசுல பதியுது.விழியன் நீங்க எல்லோருமே ஊடகங்களை ஏதோ ஒரு வகையில பயன்படுத்திட்டு இருக்கீங்க. செய்தித்தாள் படிக்கறது முக்கியம். நமக்கு தமிழ், ஆங்கில மொழி வளத்தை அது கொடுக்கும். இணையத்தை கல்விக்காக பயன்படுத்தறீங்கங்கறது நல்ல விஷயம். இணைய ஊடக வெளி ஒரு கட்டற்ற தளம். ஒரு லிங்க்ல இருந்து இன்னொன்னுக்குப் போய்க்கிட்டே இருக்கும். அதுல நேரம் விரயமாகவும் ஆகும். அதனால இணையத்தைப் பயன்படுத்தும்போது, அதுல நமக்குத் தேவையான தகவல்களைத் தேடி சரியா பயன்படுத்திக்கலாம். செய்திகளைத் தெரிஞ்சுக்க செய்தித்தாள்களில் உள்ள தலைப்புச் செய்திகளை வாசிக்கலாம். உலக நடப்பை அது தெரிய வைக்கும். எல்லா வகையான ஊடகங்களையும் சரியான முறையில பயன்படுத்தினா கல்வி, சமகால நடப்புகள், உலகம் பற்றிய வாழ்க்கைக்கல்வியை ஊடகங்கள் மூலமா பெறலாம். அது நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும்.