நட்சத்திரங்கள் விலகினார்கள்
பிரேஸில், ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இங்கு 'ஜிகா' வைரஸ் பீதி நிலவுவதால் கோல்ஃப் வீரர்களான அமெரிக்காவின் டஸ்டின் ஜான்சன், வடக்கு அயர்லாந்தின் மெக்கில்ராய் ஆகியோர் விலகினார்கள். இந்தப் பட்டியலில் டென்னிஸ் நட்சத்திரங்களான ருமேனியாவின் சிமோனா ஹாலப், கனடாவின் மிலோஸ் ராவோனிச் இணைந்துள்ளனர்.