உள்ளூர் செய்திகள்

சூரியன் தரும் சூப்பர் பவர்

இயற்கை வழங்கியுள்ள மிகப் பெரிய கொடை சூரிய சக்தி. உயிர்களின் சூழல் முதல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வரை சூரிய சக்தி உதவியில்லாமல் எதுவும் நடப்பதில்லை. சூரிய ஒளியை கண்ணாடி லென்ஸ் மூலமாகக் குவித்து காகிதத்தை எரிய வைத்துப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றி மின் சாதனங்களைப் உபயோகிக்கும் வளர்ச்சியை தற்காலத்தில் நாம் எட்டியிருக்கிறோம். சூரிய சக்தியால் இயங்கும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சூரிய சக்தி மின் ஆற்றலாக மாறுவது எப்படி?சூரிய சக்தி - சோலார் செல் - ஃபோட்டோவோல்டெய்க் (சோலார் பேனல்) - DC/AC - மின் சக்திசி.ஐ.ஜி.எஸ். (CIGS) சோலார் செல் வடிவமைப்புகண்ணாடி (ஒளியும் மின்சாரமும் கடத்தும் வகை)காட்மியம் சல்ஃபைடுசி.ஐ.ஜி.எஸ். (Cigs)மாலிப்டினம்கண்ணாடி (மின்சாரம் கடத்தும் வகை)சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் முறைகள்1. 'ஃபோட்டோவோல்டாயி' (Photovoltaic) தொழில்நுட்பம். 97 சதவீதம் இந்த முறையில்தான் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.2. செறிவூட்டப்பட்ட சூரிய வெப்பத் தொழில்நுட்பம்சோலார் செல் (Solar Cell)சோலார் செல்லில் தாமிரம், இண்டியம், காலியம், செலனைடு என்ற நான்கு வகைத் தனிமங்கள் சேர்ந்து இருக்கும். சோலார் செல்களை 'CIGS' எனக் குறிப்பிடுகிறார்கள். Copper, -Indium-, Gallium, -Selenide ஆகிய நான்கு தனிமங்களின் முதல் எழுத்துகளின் சுருக்கமே இது. சோலார் செல்கள்தான் சூரிய சக்தியிலிருந்து ஒளியை உறிஞ்சி மின்சாரமாக மாற்றுகிறது. சூரிய சக்தியை எலக்ட்ரான் என்ற மின்னணுவாக மாற்றித்தந்து பயன்படுத்துவதற்கு ஏற்ற மின்சாரமாக ஆக்குகிறது.சோலார் வாட்டர் ஹீட்டர் (Solar Water Heater)வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து பழக்கப்பட்டவர்கள், மின்சாரம் நேரத்தில் படாத பாடுபடுவார்கள். சோலார் வாட்டர் ஹீட்டரை வீட்டின் மாடியில் பொருத்திவிட்டால் போதும், சுடுதண்ணீர் பிரச்னை தீர்ந்தது.சோலார் சீலிங் ஃபேன்மின்சாரம் போயிடுச்சே… கொசுக்கடியில் எப்படித் தூங்க போறேன்... என்று கவலைப்படுபவர்களின் துயர் துடைக்க வரப்பிரசாதமாக வந்துள்ளது சோலார் சீலிங் ஃபேன். இந்த சோலார் ஃபேனை தொடர்ந்து எட்டு மணி நேரம் பயன்படுத்தலாம்.பயோ மாஸ் ஸ்டவ் (Bio Mass Stove)சூரிய மின்சக்தியின் மூலம் விசிறி, காற்றை இழுத்து அடுப்பில் இடப்பட்ட மர துண்டுகளை எரிய வைக்கிறது. இதன்மூலம் சமையலுக்கான எரிபொருள் அளவை 45 சதவீதம் வரை சேமிக்கலாம். சோலார் குளிர்சாதனப் பெட்டிசோலார் குளிர்சாதனப் பெட்டி இருந்தால், மின்வெட்டைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இவை 20 லிட்டர் முதல் 250 லிட்டர் வரை கிடைக்கிறது. வீடுகள், பால், இறைச்சிக் கடைகள், உணவகங்கள், மருத்துவமனை, ஐஸ்கீரிம் கடைகளுக்கு மிகவும் ஏற்றது.சூரிய சக்தி பம்புசெட்சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் விவசாயிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 250 அடி ஆழத்தில் இருந்தால்கூட, இதனால் தண்ணீரை இறைக்க முடியும்.சோலார் இன்வெர்ட்டர் (Solar Invertor)மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெர்ட்டர்களால் எந்த பயனும் இல்லை. சாதாரண இன்வெர்ட்டரை, சோலார் இன்வெட்டராக மாற்றினால் வீடுகளை ஜொலிக்கச் செய்யலாம்.சூரிய சக்தியால் வானில் பறக்கலாம்!சூரிய சக்தியால் விமானத்தை இயக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாக, சூரிய சக்தியால் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ்' என்ற விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் சோலார் விமானம் இதுதான்! இந்த விமானத்தை சுவிட்சர்லாந்து தயாரித்து உள்ளது. 'சோலார் இம்பல்ஸ்' விமானம் எரிபொருள் பயன்படுத்தாமல் முழுக்கவும் சூரிய சக்தியைக் கொண்டே வானில் பறந்து உலகம் முழுவதையும் சுற்றி வருகிறது. ஜம்போ ஜெட் விமானத்தைவிட நீளமான இறக்கை கொண்ட இந்த விமானத்தின் எடை ஒரு காரின் எடை அளவிற்கு இருக்கும்.சோலார் இம்பல்ஸ்இறக்கை நீளம்: 72 மீட்டர்எடை: 2.3 டன்கள்பொருத்தப்பட்டுள்ள சோலார் மின்கலங்கள் எண்ணிக்கை: 17,248விமானத்தை இயக்கும் மின்கலங்கள்: 4அதிகபட்சம் பறக்கும் உயரம்: 28000 அடிசராசரி வேகம்: மணிக்கு 75 கி.மீ.ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த 'ஹெரோக் பெனடிக்ட் டி சாஸர்' (Horace -Benedict de Saussure) என்ற அறிவியலாளர் சூரிய சக்தியைச் சேமிக்கும் கருவியை (Solar Collector) 1767ல் முதன் முதலாகக் கண்டறிந்தார்.தாமிரச் சுருளை (Copper Coil) ஒரு பெட்டியில் வைத்து சூரிய சக்தியைச் சேமிக்கும் உபகரணத்தை 'வில்லியம் ஜி பெய்லிஸ்' (William J. Baileys) என்பவர் 1908ல் கண்டறிந்தார். இதை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போது உள்ள சூரியத் தகடுகள் (Solar Panels) உருவாக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !