மெல்லிய லென்ஸ்
'நேனோ' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான சாதனை… மனித முடியை விட 2,000 மடங்கு மெலிதான லென்சை உருவாக்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பொதுவாக, சிறிய லென்ஸ் 50 நேனோமீட்டர் அடர்த்தியில் இருக்கும். ஆனால் இது, 6.3 நேனோமீட்டர் அடர்த்தியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வளையக்கூடிய கணினித் திரைகளை உருவாக்கலாம்.