இ கிரேடு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
எட்டாம் வகுப்பில், மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும்போது மிகவும் தடுமாற்றம் அடைகின்றனர். இதைத் தவிர்க்க குறைந்த பட்ச கற்றல் திறன் அடையும் அளவுக்கு அந்த மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஜூன் மாதம் வரை, இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற வாய்ப்புள்ளது. அதனால், 'இ' கிரேடு மாணவர்களின் பட்டியல்களை இயக்குனரகத்துக்கு மே 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.